கரோனாவால் கலையிழந்த ஆடிபெருக்கு! வீடுகளுக்கே சென்று கூழ் ஊற்றிய பக்தர்கள்! (படங்கள்)

தமிழகத்தில் ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இம்மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஆடிப் பெருக்கு ஆகிய நாட்களில் அம்மனுக்கு கூழ் படைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்தாண்டு கரோனா பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆடிப்பெருக்கை பக்தர்கள் வீட்டிலேயே எளிய முறையில் கொண்டாடினர். சென்னையில் ஆடிபெருக்கை முன்னிட்டு கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள சந்தன மாரியம்மன் கோவிலுக்கு அருகில், அம்மனுக்கு படைக்கப்பட்ட கூழை பக்தர்கள் வீடு தேடிச் சென்று வழங்கினர்.

aadi festival Chennai corona virus
இதையும் படியுங்கள்
Subscribe