தனிமனிதனுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமா.? இல்லையா.? எனும் கேள்வி இன்று வரை நீடித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் ஆதார் மையங்களில் பணிபுரியும் 376 ஊழியர்களின் ஐ.டி.யை முன்னறிவிப்பின்றி பிளாக் செய்ததோடு மட்டுமில்லாமல், கேள்வியேக் கேட்க வழியில்லாமல் அவர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளது தமிழக அரசின் எல்காட் நிறுவனம்.

 Aadhar closing ceremony ..? Staff in the middle street...!!!

Advertisment

தகவல் தொழில் நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய நந்தன் நீல்கேனியின் தலைமையில் 2009 பிப்ரவரி மாதம் இந்தியாவில் துவக்கப்பட்ட திட்டமே தனிமனித அடையாளத்தை உள்ளடக்கிய "ஆதார்" திட்டம். இந்த 12 இலக்க அடையாள அட்டையில் கண்ணின் விழித்திரை, கைரேகை போன்ற உயிரியளவுகளும் மனிதனின் தனிப்பட்ட சுயவிவரக் குறிப்புகளும் அடங்கியிருக்கும். நாட்டில் அனைவருக்கும் ஆதார் அட்டை அவசியம் என அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் 2011ம் ஆண்டு வெற்றிகரமாக இதனை எல்காட் நிறுவனம் இயக்கியது.

Advertisment

இதற்கென தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 500 ஆதார் மையங்களை திறந்த எல்காட் நிறுவனம் மையங்களுக்கென சொற்ப தொகையினை சம்பளமாக தந்து கணிணி ஆப்ரேட்டர்களையும் பணிக்கு அமர்த்தியது. ஆனால் பணியாளர்களுக்கான சம்பளத்தை தந்தது சென்னை மடிப்பாக்கம் சீனிவாச நகரிலுள்ள நியூ லைப் பிளேஸ்மெண்ட் நிறுவனம். கடந்த எட்டு வருடங்களாக ஆதார் மைய கணிணி ஆப்ரேட்டர்கள் பணியாற்றி வந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பின்றி கடந்த புதன்கிழமை முதல் ஏறக்குறைய 376 ஆப்ரேட்டர்களின் ஐ.டி.யை பிளாக் செய்து, அவர்களை வீட்டிற்கு அனுப்பி வருகின்றது எல்காட் நிறுவனம். இதனால் ஊழியர்கள் நடுத்தெருவில் நிற்பது ஒருபுறம் எனினும், ஆதார் மையங்களில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 Aadhar closing ceremony ..? Staff in the middle street...!!!

"ஆதாரை முழுவதுமாக மூடப்போகிறார்களா என்பது தெரியவில்லை..! காலை எட்டு மணி துவங்கி இரவு எட்டு மணி வரை பணியாற்றி வந்தாலும் மாதம் ரூ.7645 மட்டுமே சம்பளம் வழங்கி வந்தனர். இந்நிலையில் எங்களுக்கு சம்பள உயர்வு வேண்டுமென நாங்கள் ஒட்டுமொத்தமாக கோரிக்கை வைக்க, திருச்சி, சேலம், கோவை மற்றும் மதுரையில் பல கட்டமாக ஆப்ரேட்டர்களுக்கான சந்திப்பை நடத்தியவர்கள் இந்த ஜூனில் சம்பள உயர்வு தருவதாக வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. திடுமென 376 நபர்களின் ஐ.டி.யையும் பிளாக் செய்து விட்டனர். இப்போதைக்கு நாங்கள் வேலையில் இருக்கிறோமோ.? இல்லையோ.? என்பதும் தெரியவில்லை. இதனை நம்பிய நாங்கள் நடுத்தெருவில் நிற்கின்றோம். அரசு தான் இதற்கு விளக்கமளிக்க வேண்டும்" என்கின்றனர் பணியிலிருந்து ஐ.டி.பிளாக் செய்யப்பட்ட ஊழியர்கள்.

ஆதாரும், ஆதார் மைய ஊழியர்களும் உண்டா.? இல்லையா.? என்பதனை அரசு தான் அறிவிக்க வேண்டும்..!