திருச்சியில் கடந்த 6 மாதமாக தலைமறைவாக இருந்த ஒருவரை ஆதார் எண்ணுடன் இணைத்திருந்த செல்போனில் ஏடிஎம்-ல் பணம் எடுத்தபோது சிக்கி கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.

திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரை சேர்ந்தவர் நிர்மலா, காட்டூரில் உள்ள உருமுதனலெட்சுமி கல்லூரியில் உதவி பேராசிரியை அதே கல்லூரில் பணியாற்றும் ஒரு பேராசிரியருடன் இணைந்து இருந்ததை அலுவலக ஊழியர் சந்தோஷ் கண்ணன் திட்டியதாக புகார் சொல்லியிருந்தார்.

அ

Advertisment

இது குறித்து காவல்நிலையத்தில் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் 2018ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவின் படி திருவரம்பூர்ர் போலிசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் கண்ணனை தேடி வந்தனர். சந்தோஷ்கண்ணனின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்த வங்கி எண்ணில் அவரது மனைவி செல் எண்ணை கொண்டு சந்தோஷ் கண்ணன் நாமக்கல் திருநகரில் உள்ளதை கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து நமக்கல் சென்ற திருவரம்பலூர் போலிசார் சந்தோஷ்கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.