/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Irumbuthirai.jpg)
டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து தவறான கருத்துக்களை நீக்கும்வரை நடிகர் விஷாலின் இரும்புத்திரை படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நடிகர்கள் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் வரும் வெள்ளி அன்று வெளியாக உள்ள திரைப்படம் இரும்புத்திரை. இதில் ஆதார் அடையாள அட்டைக்கு கொடுக்கப்படும் தகவல்கள் தவறாக பயன்படுத்தபடுவதாக காட்சிகள் இடம்பெற்றுள்ளதை எதிர்த்து நாமக்கல் தத்தியாபுரத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அம் மனுவில் "பொது மக்களின் நலனுக்காக 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட ஆதார் அடையாள அட்டை குறித்து இரும்புத்திரை படத்தில் தவறான காட்சிகள் இடம்பெற்றுள்தால், அந்த காட்சிகளை நீக்கப்படும் வரை படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த காட்சிகளுடன் படம் வெளியானால், டிஜிட்டல் இந்தியா, மற்றும் ஆதார் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்படும் எனவும் மத்திய அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட நேரிடும் எனவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)