டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் வாங்குவதற்கு ஆதார் கட்டாயம் என்ற நிபந்தனையைத்தளர்த்தவேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது.
அந்த முறையீட்டு மனுவில், பலரிடம் ஆதார் இல்லாததால், அந்த நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்தது அரசு. அதேபோல், மது வாங்குவதற்கு டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிக அளவில் கூடுவதாகவும், மதுபாட்டில்கள் கூடுதலாக விற்கப்படுவதாகவும், வழக்கு தொடர்ந்தவரும் முறையிட்டிருந்தார்.
வரும் 14-ஆம் தேதி, அனைத்து முறையீடுகளையும் விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.