"ஆச்சி மசாலாவுக்கு கேரளாவில் தடை இல்லை" வதந்தியை நம்ப வேண்டாம் - நிறுவனம் அறிக்கை!

ஆச்சி மசாலா பொடிக்கு கேரளாவில் தடை என்று சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவியது. இது குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் ஆச்சி மசாலா நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கேரளாவில் ஆச்சி மசாலாவிற்கு தடை என்று சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது அது முற்றிலும் பொய்யானவை என்று தெரிவித்துள்ளனர்.

aachi masala

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆச்சி மசாலாவின் ஒவ்வொரு தயாரிப்பும், ஒவ்வொரு கட்டத்திலும் பல தரப்பு சோதனைகளுக்கு பிறகு தரத்தை உறுதி செய்தே விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த இடத்திலும், எந்தவித தரக்கட்டுப்பாடு சோதனைக்கும் ஆச்சி மசாலா தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆச்சியில் தரம் என்பது எப்போதும் நிரந்தரம் என்றும் அதில் சமரசத்திற்கு இடமில்லை என்றும் உறுதியாக கூறப்பட்டுள்ளது. ஆச்சி மசாலாவை கேரளாவில் உபயோகிக்க தடையில்லை என கேரளா food authority நிறுவனம் தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது. தவறான வதந்திகளை நம்பாமல் ஆச்சி மசாலா தயாரிப்புகளுக்கு வழக்கம்போல வரவேற்பை அளிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Authority Company Food saftey Kerala
இதையும் படியுங்கள்
Subscribe