Advertisment

ஆதவ் அர்ஜுனா கொடுத்த பரபரப்பு புகார்; ஒருவரிடம் போலீசார் விசாரணை!

aadhav-arjuna-gcp

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. 

Advertisment

இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இத்தகைய சூழலில் தான் த.வெ.க. பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, சென்னை தியாகராய நகரில் உள்ள காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். 

அதில், “கடந்த 10 ஆம் தேதி (10.07.2025) காலை 11 மணி முதல் 11.30 மணி வரை என்னுடைய அலுவலகம் அருகே ஆட்டோ மற்றும் காரில் வந்த 5 மர்ம நபர்கள் நோட்டமிட்டனர். இது குறித்து அவர்களிடம் விவரம் கேட்டபோது உரியப் பதிலளிக்க மறுத்ததுடன் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதன் பின்னர் அன்றைய தினத்தின் மதியம் மீண்டும் சுமார் 8 பேர் திமுக கொடியுடன் கூடிய காரில் அலுவலகத்தைச் சுற்றிச் சுற்றி வந்து நோட்டமிட்டனர். எனவே எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. ஆகையால் இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுத்து உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும்” எனத் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆதவ அர்ஜுனாவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஒருவரிடம் விசாரணை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Chennai Tamilaga Vettri Kazhagam tvk Investigation Chennai Police Aadhav Arjuna
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe