/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4203.jpg)
கோபிசெட்டிபாளையத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற 9-ம் வகுப்பு மாணவர் திடீரென மாயமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபிசெட்டிபாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி பிரபா தேவி. இவர்களுக்குமகன் சஞ்சய் குமார் (15) என்ற மகனும்ஒரு மகளும் உள்ளனர். சஞ்சய் குமார் கோபி நகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து முடித்து விடுமுறையில் வீட்டில் இருந்து வந்துள்ளார். கணவன், மனைவி இருவரும் காலையில் வேலைக்கு சென்று இரவில் தான் வீட்டுக்கு வருவார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கணவன்,மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் சஞ்சய் குமாரும் அவரது தங்கை மட்டும் இருந்தனர். பின்னர் மதியம் சஞ்சய் குமார் தனது தங்கையிடம் வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரம் வராததால் சஞ்சய் குமாரை அவரது பெற்றோர் உறவினர், நண்பர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் சஞ்சய் குமார் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து நேற்று கோபி போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மகனை மீட்டுத் தரக்கோரி சஞ்சய் குமாரின்பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான அன்று சஞ்சய் குமார் வெள்ளையில் பிரவுன் கலர் கோடு போட்ட டீ சர்ட், கருப்பு கலர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)