தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கரோனாவால் 1,630 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,00,885 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 23 பேர் கரோனாவால் உயிரிழந்து உள்ளனர். மொத்த உயிரிழப்பு 34,709ஆக உயர்ந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில், இதுவரை 658 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று 51 பேர் புதிதாக பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதேபோல, நேற்று 68 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 640 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சியில் நேற்று கரோனாவிற்கு ஒருவர் பலியாகி உள்ளார். திருச்சியில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 999 ஆக உள்ளது.