தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனாபாதிப்பு எண்ணிக்கையானதுஅதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனாவால் அதிகம் பாதிப்படைந்துள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு நேற்றுமுதல் அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.சென்னையில் 288 சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைகள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை முத்தியால்பேட்டை ஊரடங்கு வாகன சோதனையில் 99 லட்சம் சிக்கியது. உரிய ஆவணங்களின்றி சாகிப் என்பவர்கொண்டு வந்த99லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணக்கில் வராத பணம் என்பதால் இந்த பணத்தை வருமான வரித்துறையிடம் திங்கட்கிழமை ஒப்படைக்க உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.