Advertisment

13 பிள்ளைகளை பெத்தும் பிச்சையெடுக்கிறேன்: நான் செத்தால் அவுங்க பாக்கக்கூடாது: 95 வயது மூதாட்டி கண்ணீர்

lady

95 வயதான மூதாட்டியை கையில் குழந்தைபோல தூக்கிக்கொண்டு வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு ஒருவர் சென்றார். பின்னர் வெளியே வந்த அவரிடம் பாட்டிக்கு என்ன ஆச்சு, கலெக்டர் அலுவலகம் வந்ததன் காரணம் என்ன என்று விசாரித்தோம்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

திண்டுக்கல் அருகே கொடைக்காணலை சேர்ந்த தேவராஜ் மனைவி அந்தோணியம்மாள். இவர்களுக்கு 13 பிள்ளைகள் உள்னளர். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கணவரின் தொந்தரவு தாங்க முடியாமல், வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மகள் ஜெய்சிராணி வீட்டுக்கு வந்துள்ளார். மருமகன் நந்தகுமார் நன்றாக கவனித்துள்ளார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மருமகன் காலமானதையடுத்து, மகள் சரியாக கவனிக்கவில்லை.

இதையடுத்து வேலூரிலேயே பிச்சையெடுத்து வந்துள்ளார் அந்தோணியம்மாள். பிச்சையெடுக்கும் பணத்தையும் மகள் பிடுங்கிக்கொண்டு சென்றுவிடுவாராம். கடந்த மாதம் அந்தோணியம்மாள் கீழே விழுந்ததில் கால் முறிந்தது. இதனால் அவரால் நடக்க முடியாது. ஒரே இடத்தில்தான் இருக்க முடியும்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இதனை அறிந்த மணிமாறன் என்பவர்தான், அந்தோணிம்மாளை கலெக்டரிடம் மனு அளிக்க தூக்கிச் சென்றுள்ளார். அந்தோணியம்மாளுக்கு உரிய உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவரது பிள்ளைகள் மீது, முதியோர் வன்கொடுமை சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார். மனுவை பெற்ற கலெக்டர் ராமன், அந்தோணியம்மாளை முதியோர் காப்பகத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

அந்தோணிம்மாள் கூறும்போது, எனக்கு 13 பிள்ளைகள். 13 பிள்ளைகளை பெத்தும் நான் பிச்சையெடுக்கிறேன். கீழே விழுந்து கால் முறிந்ததில் நடக்க முடியாது. நான் உயிரோடு இருக்கும்போது என்னை கவனிக்காத பிள்ளைகள், உறவினர்கள் நான் இறந்த பிறகு என்னை வந்து பார்க்கக்கூடாது என்று கண்ணீர் விட்டது அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது.

old lady Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe