/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jaibeam.jpg)
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ‘ஜெய் பீம்’ திரைப்படம், குறிப்பிட்ட சமூகத்தினரைத் தவறாக சித்தரித்திருப்பதாகக் கூறி சர்ச்சைகளையும் கிளப்பியது. இருப்பினும் தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா ரசிகர்கள்எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டியிருந்தனர்.
சமீபத்தில் 'ஜெய் பீம்' படக்காட்சிகள் ஆஸ்கர் யூடியூப் தளத்தில் இடம் பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து, ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலிலும் 'ஜெய்பீம்' திரைப்படம் இடம் பெற்றிருந்தது. இறுதிப் பட்டியலில் இந்த திரைப்படம் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிப் போட்டி பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் இடம்பெறவில்லை என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)