chennai

சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்க ஏஐ கேமரா தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் என சென்னை பெருநகர மாநகராட்சி அண்மையில் அறிவித்திருந்தது. அதேபோல் பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாகவும் எனவே பொதுமக்கள் பொது இடங்களில் குப்பைகளை கொட்ட வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

Advertisment

இந்நிலையில் அக்டோபர் முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை மொத்தமாக 92 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காக 12.53 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அடுத்தபடியாக அம்பத்தூர் மண்டலத்தில் 9.40 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில் 7.80 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக மொத்தமாக சென்னையில் பொதுஇடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் 92 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Advertisment