Advertisment

தமிழ்நாட்டிற்கு 90,000 மெ.டன் யூரியா ஒதுக்கீடு!

90,000 MT of urea allotted to Tamil Nadu!

Advertisment

தமிழ்நாட்டிற்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று (27/10/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசிற்கு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி எழுதிய கடிதத்தினைத் தொடர்ந்து, மத்திய அரசு 90,000 மெட்ரிக் டன் யூரியாவை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்சமயம் நிலவிவரும் சாதகமான பருவமழை காரணமாக, 13.747லட்சம் ஹெக்டேரில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிட்டதில், இதுநாள்வரை 7.816 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisment

நடப்பு சம்பா (இராபி) பருவத்தில் நெல் மற்றும் இதர பயிர்களான சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு மற்றும் பருத்தி ஆகியவற்றின் சாகுபடி ஒட்டுமொத்தமாக 24.829 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக யூரியா மற்றும் டிஏபி உள்ளிட்ட அனைத்து வகை உரங்களின் தேவை அதிகரித்துள்ளது.

அக்டோபர் மாதத்திற்கான யூரியா, டிஏபி மற்றும் பொட்டாஷ் உரங்கள் முறையே 1,43,500 மெட்ரிக் டன், 4,480 மெட்ரிக் டன் மற்றும் 8,140 மெட்ரிக் டன் என மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. யூரியா 1,43,500 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டதில, இதுநாள்வரை உர உற்பத்தி நிறுவனங்களால் 77,863 மெட்ரிக் டன் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் மத்திய அரசின் ஒதுக்கீட்டின்படி 63,000 மெட்ரிக் டன் இறக்குமதி யூரியா தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டியுள்ளது." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Farmers tn govt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe