/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/salem court.jpg)
சேலத்தில், 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சேலம் நீதிமன்றம் இன்று (மே 14, 2018) தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள இருப்பாளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (31). கல் உடைக்கும் தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேரந்த 9 வயது சிறுமியை கடந்த 2012ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார்
எழுந்தது. பூலாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஈஸ்வரனை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை, சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் காந்திமதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி, குற்றம் சாட்டப்பட்ட ஈஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து, இன்று தீர்ப்பு அளித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)