Advertisment

யோகாசனம் செய்த படியே கலைஞரின் சாதனைகளைக் கூறி அசத்திய 9 வயது சிறுமி!

9-year-old girl claiming the artist's achievements as she did yoga!

Advertisment

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் காய்கறி கடை நடத்தி வரும் பிரபு என்பவரது மகள் சஞ்சனா. ஒன்பது வயதாகும் இவர் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (07/08/2021) முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் மூன்றாமாண்டு நினைவு நாளையொட்டி சிறுமி சஞ்சனா கலைஞரின் சாதனைகள், புகழை உச்சரித்தபடியே யோகாசனம் செய்து காண்பித்தார்.

சிறுமி யோகாசனம் செய்த படியே கலைஞரின் பிறப்பு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றது, விதவை மறுமணம், ஜமீன் முறை ஒழிப்பு, பகுத்தறிவு போன்றவற்றை திரைப்படங்களில் வசனங்களாக வைத்தது ஆகியவைக் கூறியதோடு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கை ரிக்க்ஷா ஒழிப்பு, சுயமரியாதைத் திருமண அங்கீகரிப்பு, பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் கொண்டுவந்தது உள்ளிட்ட 50 சாதனைகளை யோகாசனம் செய்தபடி கூறினார்.

Advertisment

சிறுமி சஞ்சனாவின் திறமையையும், கலைஞர் மீது வைத்திருந்த பற்றுதலையும் தி.மு.க. நிர்வாகிகள் பலரும் பாராட்டினர்.

children kalaignar tribute yoga
இதையும் படியுங்கள்
Subscribe