9 schemes for women policemen; Chief Minister's announcement

Advertisment

பெண்கள் காவல்துறையின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் ‘அவள்’ திட்டத்தை துவக்கி வைத்த முதலமைச்சர் பெண் காவலர்களுக்கான 9 திட்டங்களை அறிவித்தார்.

1973 ஆம் ஆண்டு முதல் தமிழக காவல்துறையில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். 2023 ஆண்டு என்பது தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் காவல்துறைக்கு பொன் விழா ஆண்டாகும். நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு மகளிர் காவல்துறையின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புத் தபால் தலையினை வெளியிட்டார். தொடர்ந்து அவள் திட்டத்தை துவக்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மிதிவண்டி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் டி.ஜி.பி., காவல் அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் அணிவகுப்பு முதற்கொண்டு அனைத்து நிகழ்வுகளும் முழுக்க பெண் காவல்துறையினரால் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பெண் காவலர்களுக்கான 9 அறிவிப்புகளை வெளியிட்டார்,

அதன் விவரம்:

Advertisment

• ரோல்கால் எனும் காவல் வருகை அணிவகுப்பு இனி காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றி அமைக்கப்படும்.

• சென்னை மற்றும் மதுரையில் பெண் காவலர்கள் தங்கும் விடுதி விரைவில் அமைக்கப்படும்.

• அனைத்து காவல்நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு கழிவறை வசதியோடு தனி ஓய்வறை அமைத்துத் தரப்படும்.

• தேவையான அனைத்து இடங்களிலும் காவல் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும்.

Advertisment

• பெண் காவலர்களுக்கு கலைஞர் காவல் பணி விருதும், கோப்பையும் ஆண்டு தோறும் வழங்கப்படும்.

• பெண் காவலர்கள் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு மற்றும் பணியிட மாறுதல் வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்படும்.

• பெண் காவலர்களுக்கு துப்பாக்கிச் சுடும் போட்டி தனியாக நடத்தப்பட்டு விருது மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.

•‘காவல்துறையில் பெண்கள்’ எனும் தேசிய மாநாடு ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் நடத்தப்படும்.

• பெண் காவலர்களின் நலனுக்காக பணி ஆலோசனை வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும் எனமகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு