Advertisment

கள்ளக்குறிச்சியில் பாலியல் தொழில்; அதிரடியாக நடத்தப்பட்ட சோதனை - சிக்கிய 9 பேர்!

9 persons involved in illegal business arrested in Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் பாலியல் தொழிலில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களைச் சிலர் ஈடுபடுத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

Advertisment

அதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி கவரதெரு பகுதியில் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராபின்சன் தலைமையிலான போலீசார் மேற்கொண்ட சோதனையில் கவரை தெரு பகுதியில் பாலியல் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இடைத்தரகர்களான வீரமணி, தர்மராஜ், தங்கராசு மற்றும் செந்தில்குமார், பாண்டியன் என 5 ஆண்கள் மற்றும் அமுதா, அலமேலு, வித்யா, இந்துமதி ஆகிய நான்கு பெண்கள் உட்பட ஒன்பது நபர்களையும் கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

Advertisment

அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் பாலியல் குற்றச் சம்பவங்களில் பெண்களை ஈடுபடுத்தி இடைத்தரகர்களாகச் செயல்பட்டு வந்த ஒன்பது பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

kallakurichi police Women
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe