/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/6_141.jpg)
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள அய்யகவுண்டன் பாளையம், சவுடேஸ்வரி அம்மன் கோவில் அருகில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாகப் பெருந்துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த கும்பலைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சௌந்தர் (40), மணிகண்டன் (38), ரங்கராஜன் (41), பிரேம்குமார் (35), தனபால் (67), சந்தோஷ் வெங்கட்ராமன் (25), சபரி ஆனந்த் (25), கௌரிசங்கர் (33), சந்திரசேகரன் (60) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து சூதாடப் பயன்படுத்திய சீட்டுக் கட்டுகள் மற்றும் பணம் ரூ. 2,490 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)