8 people lost their lives in a train accident in madurai

லக்னோ - ராமேஸ்வரம் சுற்றுலாரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு 9பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

லக்னோவிலிருந்து சாமி தரிசனம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்டோர் சுற்றுலா ரயில் மூலம்கடந்த 17 ஆம் தேதி தமிழகம் வந்தனர். இந்த நிலையில் இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது ரயில் பெட்டியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.உத்தரப் பிரதேசத்திலிருந்து இந்த ரயிலில் வந்த பயணிகள் சமைத்துச் சாப்பிடுவதற்காக சிலிண்டரை எடுத்து வந்ததாகவும், அப்போது அதில் சமைத்துக்கொண்டிருந்த போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து மளமளவென அடுத்தடுத்தபெட்டிகளுக்கும் பரவியுள்ளது.

இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 9பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பலர் காயமடைந்துள்ளனர். விபத்து ஏற்பட்ட உடனே தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து வருகின்றனர். மீட்புப் பணிகளும் துரிதமாகநடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகிறார்.

Advertisment