9 liquor dealers arrested

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள நேதாஜி நகரில் பொதுமக்களைத் தாக்கிய சாராய கடை வியாபாரிகள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்திருந்த நிலையில், சாராய விற்பனைக்கு கடும் எதிர்ப்பையும் தெரிவித்து வந்தனர். இதனால் சாராய வியாபாரிகள் சிலர்பொதுமக்களை தாக்கி உள்ளனர். இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் காரணமாக பொதுமக்களைத் தாக்கிய சாராயவியாபாரிகள் ராணி, ஜோதி, சோட்டா, சிரஞ்சீவி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.