Advertisment

9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கட்டாயப் பணி ஓய்வில் அனுப்ப பரிந்துரை!

9 I.A.S. Recommendation to send officers on compulsory retirement!

உதவிப் பேராசிரியர், முதுகலை ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதவி வகித்த 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கட்டாய ஓய்வில் அனுப்புமாறு தலைமைச் செயலாளருக்கு மாநிலத் தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Advertisment

முதுகலை ஆசிரியர் தேர்வு, உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வுகளின் போது, தாங்கள் சரியாக எழுதிய விடைகளைதவறு என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்ததாகவும், ஆனால் அந்த விடைகள் சரியானது என பாடப்புத்தகங்களில் இருப்பதாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மாநிலத் தகவல் ஆணையத்தில் தேர்வர்கள் மேல்முறையீடு செய்தனர்.

Advertisment

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய மாநிலத் தகவல் ஆணையம், தற்போது அதிரடியான உத்தரவுகளையும், பரிந்துரைகளையும் பிறப்பித்திருக்கிறது. அதன்படி, தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநிலத் தலைவர் முத்துராஜ் வெளியிட்டுள்ள உத்தரவில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தலைவர் பதவி வகித்த, 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கட்டாய ஓய்வில் பணியில் இருந்து அனுப்ப வேண்டும் என்றுதலைமைச் செயலாளருக்கு மாநிலத் தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

பரிந்துரையால் 2011- ஆம் ஆண்டு முதல் 2020- ஆம் ஆண்டு வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தலைவர் பதவி வகித்தவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ias officers tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe