Advertisment

'ஜெ'வின் 9 அடி வெண்கல சிலை... நடிகர் அஜித் வடிவமைத்த ட்ரோன்கள் மூலம் திறப்பு! (படங்கள்)

நேற்று (27.01.2021) சென்னை மெரினா கடற்கரையில்மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்நினைவிடம் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை போயஸ் கார்டனில் உள்ள 'வேதா இல்லம்' அரசுடைமையாக்கப்பட்டு 'ஜெயலலிதா நினைவு இல்லம்' என மாற்றப்பட்டுதிறந்து வைக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி இல்லத்தை திறந்து வைக்க, துணைமுதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Advertisment

இந்நிலையில் தற்போது, சென்னை கடற்கரை சாலையான காமராஜர் சாலையில் லேடி வெலிங்டன் கல்லூரியிலுள்ள உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்டி, அங்குஅமைக்கப்பட்டுள்ள 9 அடி உயரம் கொண்ட ஜெலலிதாவின் வெண்கல சிலையை முதல்வரும், துணை முதல்வரும் திறந்து வைத்தனர். ட்ரோன் மூலம் சிலை திறந்துவைக்கப்பட்டு மலர் தூவப்பட்டது.

Advertisment

சிலை திறக்கப் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் அண்ணா பல்கலைகழக மாணவர்களுடன்சேர்ந்துநடிகர் அஜித் வடிவமைத்த ட்ரோன்என்பது கூடுதல் தகவல்.

Drone ajith statue jayalalitha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe