Advertisment

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்... தேதியை அறிவித்தார் மாநில தேர்தல் ஆணையர்!

9 District Local Elections .. State Election Commission Announces Date!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று (13/09/2021) மாலை 05.00 மணிக்குச் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார். தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டிவரும் நிலையில், இந்த மாவட்டங்களில் தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பின்போது அறிவிக்க உள்ளதாக முன்னரேசெய்தி வெளியாகியிருந்தது.

Advertisment

election

இந்நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரது அறிவிப்பு பின்வருமாறு, தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு2 கட்டங்களாக உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும். அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் தேர்தல் நடைபெறும். 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித்தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும். உள்ளாட்சித்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு கடைசி நாள் செப்.22.வேட்புமனு மீதான பரிசீலனை செப்.23 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுவைத்திரும்பப் பெற செப்.25 வரை அவகாசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Tamilnadu local election
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe