Advertisment

கடலூரில் நம்மாழ்வாருக்கு 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

 8th Anniversary of Nammazhvar in Cuddalore!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடியில் செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம் சார்பில் இயற்கை வாழ்வியல் அறிஞர் கோ. நம்மாழ்வாரின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் தலைமை ஒருங்கிணைப்பாளர் கரும்பு கண்ணதாசன் தலைமையேற்று நம்மாழ்வார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து உரையாற்றினார்.

Advertisment

தமிழக உழவர் முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. வேல்முருகன், திருவள்ளுவர் கலைக்குழு செயலாளர் தி. சின்னமணி, ஆசிரியர் மு. பழனிவேல், திராவிட கழக கிளைச் செயலாளர் பச்சமுத்து, விகடகவி உழவர் உற்பத்தியாளர் நிறுவன துணைத் தலைவர் க. இராமச்சந்திரன், மரபு வழி உழவர்கள் முருகன்குடி முருகன், வெங்கடேசன், இறையூர் கணேசன், கணபதிகுறிச்சி மணிவேல், செல்வமணி, அன்பரசன், சின்னக்கொசப்பள்ளம் எழில்வேந்தன், பெலாந்துறை பாக்கியராஜ் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.

Advertisment

முருகன்குடி கனரா வங்கி அதிகாரி பூங்குன்றன் (எ) தினேசு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மா. மணிமாறன், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி. பிரகாசு, நாம் தமிழர் கட்சி நல்லூர் ஒன்றியத் தலைவர் வே. இளந்தமிழன், திருவள்ளுவர் தமிழர் மன்றச் செயலாளர் தி. ஞானபிரகாசம், இணைய வழிச் செயல்பாட்டாளர் மு. பொன்மணிகண்டன், சி. பிரபாகரன், மரபு வழி உழவர்கள் முருகன்குடி கார்த்திக், தாழநல்லூர் கவியரசன், அன்புமணி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

Cuddalore nammalvaar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe