kalaignar

திமுக தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் இருந்து செல்லம்மா என்ற 87 வயது மூதாட்டி தனியாக சென்னை வந்தார். சென்னை வந்த அவர் காவேரி மருத்துவமனையை எங்கு உள்ளது என்று விசாரித்து அங்கு வந்து சேர்ந்தார்.

Advertisment

ஏற்கனவே அங்கு கூடியிருந்த திமுக தொண்டர்களுடன் இணைந்து கலைஞர் வாழ்க என்று முழக்கமிட்டார். அங்கு இருந்தவர்கள் அவரை, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம் அழைத்துச் சென்று அம்பாசமுத்திரத்தில் இருந்து வந்திருப்பதாக தெரிவித்தனர். அப்போது ஆ.ராசா, தலைவர் உடல்நலம் சீராக உள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் என்று தெரிவித்தார்.

Advertisment