
திருவண்ணாமலையில் பாஜக பிரமுகரிடம் இருந்து ரூ. 50 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்கப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், அம்மணி அம்மாள் கோபுரம் அருகே ரூ. 50 கோடி மதிப்பிலான 23,000 சதுர அடி பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. 87 ஆண்டுகளுக்கு முன்பு இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், கோயிலுக்குச் சொந்தமான அந்த 23,000 சதுர அடி நிலத்தை அறநிலையத்துறைக்கு மாற்ற உத்தரவிட்டிருந்தது.
இந்த இடத்தில் தற்போது பாஜக ஆன்மீக பிரிவு, கோயில் மேம்பாட்டு பிரிவின் மாநிலத் துணைத் தலைவர் சங்கர் என்பவர் தனது வீடு மற்றும் அலுவலகத்தை கட்டியிருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு நகலை வழங்கிவிட்டு, கோயில் நிர்வாகம் அவரின் வீடு மற்றும் அலுவலகத்தை இடித்து நிலத்தை மீட்டது.