Skip to main content

தமிழகத்தில் பணிபுரிய சிறப்பு ரயிலில் வந்திறங்கிய 860 பெண்கள் 

Published on 30/09/2022 | Edited on 30/09/2022

 

860 women arrived in Tamil Nadu by special train to work

 

ஓசூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்ற ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் 860 பெண்கள் அழைத்து வரப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

ஓசூர் அருகே உள்ள கெலமங்கலம் பகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் என்ற செல்போன் உதிரி பாகங்கள் தயார் செய்யும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் 18000 இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. 

 

எனவே இந்நிறுவனத்தில் பணிபுரிய 12 வகுப்பில் தேர்வான பெண்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு இந்நிறுவனத்தில் பணியாற்ற 860 இளம் பெண்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் தமிழகம் வந்தடைந்தனர். இவர்களை அழைத்து வர சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. ஜார்கண்ட் மாநிலம் ஹடியா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் இன்று அதிகாலை ஓசூர் வந்தடைந்தது.

 

சிறப்பு ரயிலின் மொத்தமுள்ள 20 பெட்டிகளில் 10 பெட்டிகளில் வேலைக்கு வந்த பெண்கள் பயணம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் தனியார் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்