84th Graduation Ceremony at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 18-ம் தேதி 84 வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் பல்கலைக்கழக வேந்தர் தமிழக ஆளுநர் ரவி பங்கேற்று மாணவ மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்குகிறார். விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தர் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாழ்த்துரை வழங்கவுள்ளனர்.

Advertisment

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்புரையாற்றுகிறார். 18-ந்தேதி காலை 7 மணிக்குக் ஆளுநர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். மாலை 4 மணிக்கு அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் பட்டமளிப்பு விழாவில் மாணவ மாணவிகளுக்குப் பட்டம் வழங்கி உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் சீதாராமன் உள்ளிட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். முதல் முறையாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா மாலை நேரத்தில் நடைபெறுகிறது. எப்போதும் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற பட்டமளிப்பு விழா இந்த ஆண்டு 3 மணி நேரம் 15 நிமிடம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.