81 lakh worth of gold seized at Trichy airport

Advertisment

சார்ஜாவில் இருந்து இன்று காலை திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணி தன்னுடைய உடைமைகள் இடையில் மறைத்து கொண்டு வந்த 983.50கிராம் பசை வடிவிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் 48 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டுள்ளது.

அதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியை சோதனை செய்த போதுபசை வடிவிலான 668.600கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 33 லட்சம் ரூபாய் என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு பயணிகளிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.