Advertisment

தலைமைக் காவலராக இருந்த 81 பேர் எஸ்.ஐ.யாக பதவி உயர்வு... எஸ்.பி.சீனிவாசன் பாராட்டு!

Advertisment

தமிழக அரசின் ஆணைப்படி, கடந்த 1997-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 25 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டம் & ஒழுங்கு, போக்குவரத்து காவல் பிரிவு ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரிந்து 25 ஆண்டுகள் எவ்வித தண்டனை மற்றும் காவல்துறை ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படாத பெண்கள் உட்பட 81 தலைமை காவலர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றனர். இந்நிலையில் பதவி உயர்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் நேரில் அழைத்துப் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்ததுடன் மட்டுமல்லாமல் பணியில் திறம்பட செயல்பட வேண்டுமென வாழ்த்தினார்கள். உடன் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரன் மற்றும் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Dindigul district police
இதையும் படியுங்கள்
Subscribe