Advertisment

5 மணி நேர சோதனையில் 80 ஆயிரம்; பத்திரப்பதிவு அலுவலகத்தில் பரபரப்பு

 80 thousand for a 5-hour test; Confusion at the deed office

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட அதிரடி ரெய்டில் 80 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேரடிப் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடியாக உள்ளே புகுந்து சோதனை நடத்தினர். அலுவலகத்தில் உள்ளே மட்டுமல்லாது பத்திரப்பதிவுக்காக வந்திருந்தவர்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனைக்கு உட்படுத்தினர்.

அலுவலகம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணத்தையும் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். இது தொடர்பாக சார்பதிவாளர் பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் லஞ்ச ஒழிப்பு துறை பரிந்துரைத்துள்ளது. மொத்தமாக ஐந்து மணி நேரம் நடைபெற்ற சோதனையில் 79 ஆயிரத்து நூறு ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.

raid registration
இதையும் படியுங்கள்
Subscribe