தேர்தல் விதிகளை மீறியதாக 80 வழக்குகள் பதிவு!

 80 cases registered for violating election rules

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட திருவாரூரில் விதிகளை மீறியதாக அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் மீது 80 வழக்குகள் காவல்துறையினரால்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் தேதி திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட அன்று மாலையே திருவாரூரில் தேர்தல் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அனுமதியின்றி சுவர் விளம்பரம், விளம்பர பதாகைகள், 50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டுவந்தால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரக்கூடாது போன்ற விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் அனுமதியின்றி சுவர் விளம்பரங்கள் செய்ததாகஇன்று வரை 80 வழக்குகள் அதிமுக, திமுக, அமமுக கட்சி பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கு மேலும் இது போன்ற விதிமீறலில் ஈடுபட்டால் கண்டிப்பாக வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை தெரிவித்துள்ளார்.

admk ammk byelection case Thiruvarur
இதையும் படியுங்கள்
Subscribe