8 years in jail for police inspector who took bribe from farmer

ஈரோட்டில் விவசாயியிடம் 1லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் காவல் ஆய்வாளருக்கு 8 வருடம் சிறை தண்டனை விதித்து மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Advertisment

கடந்த 2017 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த தண்ணீர் பந்தல் பாலையத்தை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி மகன் சர்வேஸ் என்பவரை வழக்கில் இருந்து விடுவிக்க நம்பியூர் காவல் துறை ஆய்வாளராக இருந்த விவேகானந்தன் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு 50 ஆயிரம் ரூபாய் பெற்ற போது கையும் களவுமாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Advertisment

இந்த வழக்கு மாவட்டத்தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஆய்வாளருக்கு இரு சட்ட பிரிவுகள் கீழ் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், அதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சி.எம். சரவணன் தீர்ப்பு அளித்துள்ளார்.