திருப்பூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 62 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர்ஜோதி நகர் பகுதியை சேர்ந்த அனீபா என்ற 65 வயது முதியவன்கடந்த ஆண்டு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான்.

இதையறிந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் அனீபாவிற்குபோக்ஸோசட்டத்தின் கீழ் ஏழு வருட சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Follow Us