/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a72424.jpg)
விவசாய நிலத்தை உழுத பொழுது தந்தையின் கண் முன்னே டிராக்டரில் சிக்கி எட்டு வயது சிறுவன் உயிரிழந்தது வேலூரில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள குக்கலப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர்கள் தாமோதரன்-கவிதா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூன்றாம் வகுப்பு படித்து வந்த இளைய மகன் பரத்குமார் (8 வயது) இன்றுவிடுமுறை தினம் என்பதால் தந்தையுடன் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது தாமோதரனுக்கு சொந்தமான நிலத்தில் வேர்க்கடலை பயிரிடுவதற்காக ஆதிகேசவன் என்பவர் டிராக்டர் மூலம் நிலத்தை உழுது கொண்டிருந்தார்.
திடீரென எதிர்பாராத விதமாக டிராக்டரி பின்புற பகுதியில் சிறுவன் பரத்குமார் எறியுள்ளார். அதனை பார்க்காமல் டிராக்டர்இயக்கப்பட்டதில் சிறுவன் டிராக்டரில் சிக்கி சிறுவன் பரத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தந்தையின் கண் முன்னே எட்டு வயது சிறுவன் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து இலத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)