ஆக்கப்பூர்வமான வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆளுநர் ஆய்வு செய்வதை தடுக்க முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஆக்கப்பூர்வமான வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆளுநர் ஆய்வு செய்வதை தடுக்க முடியாது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்வதாலேயே கைது செய்யப்படுகின்றனர். நாமக்கல்லில், சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததால் தான், திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை வழங்கியுள்ளனர். 100க்கு நான்கைந்து விவசாயிகள் மட்டுமே நிலத்தை கொடுக்க மறுக்கின்றனர். முன்பை விட தற்போது வாகனங்களன் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. அதற்கேற்றவாறு சாலை விரிவாக்கம் செய்யப்பட வேண்டியது அரசின் கடமை. இதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு மாநில அரசு உதவி செய்கிறது.
முன்பை விட தற்போது அதிகளவு இழப்பீடு வழங்கப்டுகிறது. திமுக ஆட்சியில் அவ்வாறு வழங்கப்படவில்லை. வீடு, கட்டடத்திற்கு இழப்பீடு வழங்கப்படும். சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு தொழிற்சாலைகள் வர வாய்ப்புள்ளதால், விமான நிலைய விரிவாக்கம் தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)