திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்தவடமாத்தூர்கிராமத்தில் எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பின் சார்பில் மஞ்சுளா தலைமையில் எட்டு வழிச் சாலை அமைப்பதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தி சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர்கறுப்புக்கொடிஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலை, திருவண்ணாமலை - சேலம் செல்லும் சாலை ஆகிய சாலைகள்முழுமையாகச்சேதம் அடைந்த நிலையில் அதனைஅகலப்படுத்திச்சரிவரச்சாலை அமைக்காத மத்திய மாநில அரசுகள், விவசாய நிலங்களை அழித்து எட்டு வழிச்சாலை மற்றும் பசுமை சாலை என அறிவித்து பசுமையை அழிக்க நினைக்கும் தமிழகஅரசைக்கண்டித்தும், எட்டுவழிச்சாலைதிட்டத்தைக்கைவிட வேண்டும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 8 வழிச்சாலை வழக்கைதிரும்பப்பெறவேண்டும்என்கிற கோரிக்கைகளைமுன்னிறுத்திக்கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்தக் கூட்டத்தில் 8 வழிச்சாலை அமைவதால் தாங்கள் பாதிக்கப்படாத சூழ்நிலையிலும் 8 வழிச்சாலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக இந்தத்திட்டத்தைக்கைவிடவலியுறுத்திப்பல விவசாயிகள் கலந்துகொண்டனர்.
எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அபிராமன்விவசாயச்சங்கத்தைச் சார்ந்த அழகேசன் மாவட்டவிவசாயச்சங்கத் தலைவர் வெங்கடேசன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். மாநிலம் முழுவதும்இதேபோல்விவசாயிகளைத்திரட்டிபோராடப்போவதாகநிர்வாகிகள் தெரிவித்தனர்.