Advertisment

பிறந்தநாள் கொண்டாடிய பயிற்சி மருத்துவர்கள் 8 பேர் தற்காலிக பணி நீக்கம்..?

8 trainee doctors fired for celebrating birthday ..?

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவக் கல்லூரி வாயிலில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் நிறுவனரும் இணை வேந்தருமான ராஜா முத்தையாவின் ஆளுயர சிலை உள்ளது.

Advertisment

இதில், கடந்த 28-ஆம் தேதி இரவு பயிற்சி பல் மருத்துவராகப் பணியாற்றும் மருத்துவர் சக நண்பர்களுடன் அவரது பிறந்த நாள் கேக்கை சிலையின் தலையில் வைத்து வெட்டி கொண்டாடியுள்ளனர். இவர்கள் கேக் வெட்டி கொண்டாடிய படம் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் சம்பந்தப்பட்ட பயிற்சி மருத்துவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

அதே நேரத்தில் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் பல்கலைக்கழக நிர்வாகம் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக பல் மருத்துவ பயிற்சி மருத்துவர்கள் 8 பேரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Chidambaram medical college
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe