சென்னை உயர் நீதிமன்றத்தில், மணல் கடத்தல் வழக்கில்சம்பந்தப்பட்ட 8 பேர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு, நீதிபதி வேலுமணி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, எட்டு பேருக்கும் முன்ஜாமீன் வழங்குகிறேன்,இவர்கள் நிபந்தனை தொகையை முதலமைச்சரின் கரோனா நிதிக்கு தரவேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் ஆஜரான கூடுதல் பப்ளிக் பிராசிகியூட்டர் ஜோதிகுமார் இதுகுறித்துகூறும்போது, “முதலமைச்சரின் நிதிக்கு இன்று ஒரே நாளில்,8 வழக்குகளின் மூலமாக 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றார்.