
ஈரோட்டில் பணம் வைத்துச்சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபி கூகலூர் மண்ணுவகாடு பகுதியில் சிலர் பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடுவதாகப்போலீசாருக்குத்தகவல் வந்தது. இதன்பேரில், கோபி போலீசார்அங்கு விரைந்து சென்று சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள் கூகலூர் ராமன் வீதியைச் சேர்ந்த ராமசாமி மகன் முருகேஷ்(25), அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் குமார்(26), ராஜேந்திரன் மகன் முத்துக்குமார்(25), திருப்பதி மகன் சசி(25), குப்புசாமி மகன் மூர்த்தி(27), ஆரான் மகன் ஆனந்தன்(31), வேலுமணி மகன் திருமூர்த்தி(24) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்துஅவர்களிடம் இருந்து ரூ.1,000 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டினை பறிமுதல் செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)