8 நிமிடங்கள் மட்டுமே மருத்துவமனையில் இருந்த விஜய்!

vija

திமுக தலைவர் கலைஞர் உடல் நலம் விசாரிக்க நடிகர் விஜய் இன்று காலை காவேரி மருத்துவமனை வருகை தந்தார்.

திமுக தலைவர் உடல்நலக்குறைவுக் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 4 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கடந்த 29 அன்று ஏற்பட்ட பின்னடைவுக்குப் பின், கருணாநிதி மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறார். இன்று 5 வது நாளாக கலைஞர் உடல்நிலை சீராகி இருக்கிறது. அவர் மேலும் சில நாட்களுக்கு தங்கி சிகிச்சை பெற வேண்டும். ரத்தம், கல்லீரல் தொடர்பான சிகிச்சை தொடர்ந்து தேவைப்படுகிறது என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vssd

இந்நிலையில் கலைஞரின் நலம் விசாரிக்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் தினமும் மருத்துவமனை வந்து செல்கின்றனர்.

அந்தவகையில், நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலைஞர் நலம் விசாரிக்க காவேரி மருத்துவமனை வருகை தந்தனர். இதைத்தொடர்ந்து, கலைஞர் நலம் விசாரிக்க நடிகர் விஜய் இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு மாருதி அல்டோ 800 காரில் வருகை தந்தார்.

பின்னர் மருத்துவமனை உள்ளே சென்ற அவர் 8 நிமிடத்தில் வெளியில் திரும்பினர். பின்னர் முன்வாசல் வழியாக வந்த விஜய் பத்திரிகையாளர்கள் சூழந்து கொண்டதால் மருத்துவமனையில் பின்வாசல் வழியாக சென்றார்.

kalaignar vijay
இதையும் படியுங்கள்
Subscribe