8 kg of gold smuggled in a modern way

Advertisment

ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் இன்று (03.07.2021) அதிகாலை 4:30 மணி அளவில் கோவை பீளமேடு விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த 6 பேரிடம் குடியுரிமை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அவர்கள் பேஸ்ட்டில் தங்கத்தைக் கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 6 பேரும் கோவை சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்த8 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இதைக் கடத்திவந்த ஆறுமுகம், ஹாஜி அப்துல் ஹமீது, மாதவன், சுலைமான், ராஜேந்திரன், டெனி இப்ராஹீம் ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது.