style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link"> |
கேரளாவை போல் தமிழகத்திலும் 8 மணி நேரம் பணியை அமல்படுத்துவதில் என்ன தயக்கம்? என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை சரமாரியாக விளாசியுள்ளது.
போலீசாரின் பிரச்னைகளை தீர்ப்பது தொடர்பான, குழு அமைப்பது குறித்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு சரமாரியாக விளாசினார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810"> |
வழக்கு விசாரணையின் போது அவர் கூறியதாவது, போலீசில் 18 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. ஆனால், 10 ஆயிரம் போலீசார் ஆர்டர்லியாக உள்ளனர். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளின் வீடுகளிலும் ஆர்டர்லி உள்ளனர். அவர்களை திரும்ப பெற வேண்டும் என நீதிபதி கிருபாகரன் கூறினார்.
நீதிமன்றம் மூலம் அனுமதி வாங்கிவிட்டு பொது மக்களுக்கு இடையூறாக சிலர் நடந்து கொள்கின்றனர். குற்றவாளிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் மனித உரிமை ஆர்வலர்கள், போலீசாருக்கு ஆதரவாக குரல் கொடுப்பதில்லை என்றும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து காவலர்களின் மன அழுத்தத்தை போக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு 6 வார காலம் கூடுதல் அவகாசம் வழங்கியும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
கேரளாவைப்போல் தமிழகத்திலும் போலீசுக்கு 8 மணி நேர பணியை அமல்படுத்துவதில் என்ன தயக்கம்? என்றும் தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். மக்கள் தொகைக்கு ஏற்ப உள்ள போலீசாரின் எண்ணிக்கை தொடர்பாக அறிக்கை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 13ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.