/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/39_43.jpg)
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார்பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், ராஜ்குமார் ஆகிய இருவரும் இணைந்து செய்யாரைதலைமை இடமாகக் கொண்டு எஸ்.எஸ் என்ற நிதி நிறுவனத்தை தொடங்கி செய்யார், ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிளை அலுவலகங்களை தொடங்கி 500 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை தீபாவளி சிட்பண்டைபல்வேறு குழுக்களாக பிரித்து நடத்தி வந்தனர். இதனை விரிவுபடுத்தி மளிகை பொருள், பட்டாசு, தங்க நாணயங்கள் உள்ளிட்ட வகையில் வழங்கும் சிட்பண்டுகளையும் நடத்தி வந்தனர்.
இவர்கள் நிதி நிறுவனத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏஜென்டுகளை நியமனம் செய்து அவர்களுக்கு கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும்சலுகைகளையும் வெளியிட்டு அவர்கள் மூலமாக ஒவ்வொரு ஏஜென்டுகளும் தலா 200 முதல் 2000 உறுப்பினர்களை சீட்டு நிறுவனத்தில் இணைத்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/41_63.jpg)
இது ஒரு புறம் இருக்க, ஒரு லட்சம் ரூபாய் பணம் கட்டினால் 5 சவரன்தங்க நகை, வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்டவைவழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டதை நம்பி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இதில் தங்களை இணைத்துக் கொண்டனர். கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் அளவிற்கு பொதுமக்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து சீனிவாசன் மற்றும் ராஜ்குமார் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் செய்யார் காவல் நிலையம், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என பல இடங்களில் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் செய்யாறு காவல்துறையினர் 11 லட்சம் மோசடி செய்ததாக சீனிவாசனை மட்டும் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளனர். ஆனால், மோசடிக்கு முக்கிய காரணமான ராஜ்குமார்இதுவரை கைது செய்யப்படவில்லை ஆகவே பாதிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு எதிரே கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு மோசடி செய்த ராஜ்குமாரை கைது செய்ய வலியுறுத்தினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/40_42.jpg)
இதனைத்தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களில் எவ்வளவு நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? தொகை எவ்வளவு என தனித்தனி நபர்களாக ஆதாரங்களுடன் புகார் மனுக்களாக எழுதி வாங்கினர்.
கடந்த ஓராண்டாக வட மாவட்டங்களை குறிவைத்து பல்வேறு நிதி நிறுவனங்கள் ஏழை எளிய மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)