Advertisment

8 பேர் மயக்கம்; அதே பள்ளியில் மீண்டும் பரபரப்பு

8 faint; In the same school, there is excitement again

சென்னை திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 25 ஆம் வாயு கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் நிலையில் திடீரென கெமிக்கல் வாசகம் வீசியதில் மூன்று மாணவிகள் மயக்கமடைந்த நிலையில்பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மயக்கமடைந்த மாணவவிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் அவசரமாக பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். பள்ளிக்கு விடுமுறையும் விடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இந்நிலையில் இன்று (04/11/2024) வாயுக்கசிவு ஏற்பட்ட அதே பள்ளியில் மீண்டும் மாணவிகள் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்த மீண்டும் இந்த தகவல் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. உடனடியாக பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை அவசரமாக வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.இதனால்இந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் அவசரகதியாக வெளியேறிய பொழுது சிலர் தடுக்கி விழுந்து மயக்கமடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை எட்டு பேர் மயக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

மாணவர்களை அழைத்துச்செல்ல வந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாணவர்களை வகுப்பறைக்குள் புகுந்து அழைத்துச்செல்ல முயன்ற சில பெற்றோர்களும் மயக்கம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்த வாயுக்கசிவு ஏற்பட்ட சம்பந்தப்பட்டதனியார் பள்ளியில் வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் மீண்டும் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

police gas
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe