நேற்று இரவு கரையைகடக்க தொடங்கியகஜாபுயல் நாகை மற்றும் கடலோர மாவட்டங்களில் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

ASA

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். பட்டுக்கோட்டை சிவன் கொல்லையில்வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து ரமேஷ், தினேஷ், சதீஷ் மற்றும் உறவினர் அய்யாதுரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. தஞ்சாவூரில் அதிராம்பட்டினத்தில் வீட்டின் சுவர் இடிந்து3 வயது பெண் குழந்தை திராவிடமணி உயிரிழந்துள்ளது.

Advertisment

கடலூரில் வேப்பூர் அருகே சுவர் இடிந்து விழுந்து அய்யம்மாள் என்பவரும், கடலூர் குறிஞ்சிப்பாடி பகுதியில் மின்சாரம் தாக்கி ஆனந்த்என்பவரும் உயிரிழந்துள்ளனர்.திருவண்ணாமலையில் செய்யாறு அருகே வடமணபாகத்தில் கனமழையால் சுவர் இடிந்ததில்7 வயது சிறுமி பிரியாமணி பலியானார் மேலும் இந்த விபத்தில்படுகாயமடைந்த மேலும் 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.