திருச்சி மாநகரில் போலீசாரின் தீவிர சோதனையால் கஞ்சா வியாபாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா விற்பனை திருச்சி மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாநகர போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் திருச்சி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அதிரடி சோதனைகள்நடத்தப்பட்டன. இந்த சோதனையில் மாநகரின் பல இடங்களில் கஞ்சா விற்றதாக 8 கஞ்சா வியாபாரிகள்கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 10,000 பணம் மற்றும் கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.