Skip to main content

தொடர் திருட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது...

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

8 arrested for serial theft

 

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் தொடர்ந்து பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 8 பேர் கொண்ட ஒரு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் ஆடு, மாடுகளை வீட்டில் புகுந்து திருடுவது, வழிப்பறி இப்படி பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்துவந்தன. இதை எடுத்து வேப்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் டெல்டா டீம் சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் நேற்று  இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

 

இரவு 2.30 மணி அளவில் அவ்வழியாக வந்த ஒரு பஸ்ஸை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த பஸ்ஸில் இருந்து நான்கு பேர் மூட்டை முடிச்சுகளுடன் இறங்கி தப்பி ஓட முயன்றுள்ளனர். அவர்களை மடக்கிப் பிடித்தபோது, அவர்கள் வைத்திருந்த மூட்டையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

 

போலீசாரின் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், சிறுபாக்கம் பகுதிகளில் தொடர் திருட்டு உட்பட பல்வேறு திருட்டுகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது ஏற்கனவே 13 வழக்குகள் உள்ளதும், மேலும் அடுத்தடுத்து அவர்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருடி அதில் கிடைத்த நகைகளை உறவினர்களிடம் கொடுத்து விற்றதும் தெரியவந்துள்ளது. 

 

இந்த நிலையில் நேற்று இரவு வேப்பூர் பகுதியில் திருடுவதற்காக அவர்கள் வந்தபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை அவரது மகன் ரஞ்சித், மூர்த்தி கர்நாடக மாநிலம் இஸ்லாம்பூரை சேர்ந்த சத்யா ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மோட்டூரைச் சேர்ந்த அண்ணாதுரை அவரது மகன் ரஞ்சித் மூர்த்தி பெருமாள் என்பவரது மனைவி லட்சுமி, ரஞ்சித் என்பவரது மனைவி மாறி பழனி என்பவரது மனைவி சரிதா, கர்நாடக மாநிலம் இஸ்லாம்பூரை சேர்ந்த முருகன் மகன் சத்யா உட்பட 8 பேரை கைது செய்து உள்ளனர். 

 

அவர்களிடமிருந்து 39 சவரன் நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் அவர்கள் திருடுவதற்கு பயன்படுத்திய ஆயுதங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்ததோடு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தின் மூலம் சிறையில் அடைத்துள்ளனர். தொடர் திருட்டில் ஈடுபட்ட ஒரு கும்பலை வேப்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் டெல்டா பிரிவு போலீசார் பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்