Advertisment

ஐடிஐ மாணவர் கொலை; 2 ஆண்டுகள் கழித்து 8 பேர் கைது

8 arrested in ITI student case after 2 years

Advertisment

திருச்சி அருகே ஐடிஐ மாணவர் கொலை சம்பந்தமாக2 ஆண்டுகளாக இழுத்தடித்த வழக்கில்8 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அடுத்துள்ள கொடியாலம் மேலத்தெருவைச் சேர்ந்த பொன்னன் மகன் கோகுல்(19). திருச்சி அரசினர் ஐடிஐயில்படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் வீட்டு வாசலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். இது குறித்து உடனடியாக ஜீயபுரம் காவல் நிலையத்திற்குத்தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகத்திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாகத்திருச்சி மாவட்டம் காந்தி தெருவைச் சேர்ந்த மருத ராஜா என்பவரது மகன் தேசிங்குராஜா(27), கந்தசாமி என்பவரது மகன் கமல்ராஜ் (21), விஜய் என்பவரது மகன் ஜெய்ஆகாஷ்(22) ராமச்சந்திரன் என்பவரது மகன் மகேஷ்வர்மா(22), சதாசிவம் என்பவரது மகன் முத்து(22), செல்வராஜ் என்பவரது மகன் நித்தியானந்தம்(29)மற்றும் சந்திரன் என்பவரது மகன் ரஞ்சித்(22 ), கணபதி என்பவர் மகன் மதுர் விஷ்ணு(18), ஆகியோரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக ஐடிஐ மாணவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

arrested police student
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe